மாவட்ட செய்திகள்

விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் + "||" + Demonstration

விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் 70 பேரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர், 
விருதுநகரில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் 70 பேரை போலீசார் கைது செய்தனர். 
ஆர்ப்பாட்டம் 
விருதுநகரில் அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சார்பில் உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் படுகொலை சம்பவத்தை கண்டித்தும், இதுதொடர்பாக மத்திய இணைமந்திரி அஜய்மிஸ்ராவை நீக்கம் செய்யக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நகர் பழைய பஸ் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
70 பேர் ைகது 
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி. லிங்கம், விவசாய சங்க மாவட்ட செயலாளர் முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு் கட்சியின் மாநில குழு உறுப்பினர் பாலசுப்ரமணியம், தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் நாராயணசாமி, தமிழக விவசாயசங்கத்தின் மாநிலத் துணைத்தலைவர் விஜய முருகன், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாநில குழு உறுப்பினர் முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
ஆர்ப்பாட்டத்தின் போது பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரின் உருவப் படத்தை எரிக்க முயன்றனர். இதனால் உருவப்படத்தை பறிக்க முயன்ற போலீசாருக்கும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 70 பேரை கைது செய்து வேனில் ஏற்றி மதுரை ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சம்பவத்தால்  பழைய பஸ் நிலையம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. சங்கரன்கோவிலில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
சங்கரன்கோவிலில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
2. காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பாவூர்சத்திரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
3. மருந்தாளுனர்கள் ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்தாளுனர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. ஓசூரில் மத்திய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஓசூரில் மத்திய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5. தர்மபுரியில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் தர்மபுரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.