மாவட்ட செய்திகள்

அரசு ஆஸ்பத்திரியில் கணவரால் வெட்டப்பட்ட பெண் ஊழியர் சாவு + "||" + Female employee hacked to death by husband at government hospital

அரசு ஆஸ்பத்திரியில் கணவரால் வெட்டப்பட்ட பெண் ஊழியர் சாவு

அரசு ஆஸ்பத்திரியில் கணவரால் வெட்டப்பட்ட பெண் ஊழியர் சாவு
பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் கணவரால் வெட்டப்பட்ட பெண் ஊழியர் உயிரிழந்தார். இதனால் கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை:
பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் கணவரால் வெட்டப்பட்ட பெண் ஊழியர் உயிரிழந்தார். இதனால் கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கூலித்தொழிலாளி

பாளையங்கோட்டை மேல பாலாமடை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிச்சையா (வயது 57), கூலித்தொழிலாளி. 

இவருடைய மனைவி மாரியம்மாள் (42). இவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு ஏற்கனவே 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

அரிவாள் வெட்டு

இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி மாரியம்மாள் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பிச்சையா, மாரியம்மாளிடம் தகராறு செய்தார். தகராறு முற்றவே பிச்சையா தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் மாரியம்மாளை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போலீஸ் இன்ஸ்பெக்டர் மீஹா விசாரணை நடத்தி பிச்சையா மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில், மாரியம்மாளின் நடத்தையில் சந்தேகம் அடைந்த பிச்சையா அவரை அரிவாளால் வெட்டியதாக கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

சாவு

இந்த நிலையில் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மாரியம்மாள் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆட்டோ டிரைவர் பலி; போலீஸ்காரர் படுகாயம்
அருப்புக்கோட்டை அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் பலியானார். போலீஸ்காரர் படுகாயம் அடைந்தார்.
2. பஸ் மோதி தொழிலாளி சாவு
பஸ் மோதி தொழிலாளி சாவு
3. சாலையில் இறந்து கிடந்த வாலிபர்
வாலிபர் சாலையில் இறந்து கிடந்தார்.
4. மேற்பனைக்காடு பகுதியில்20-க்கும் மேற்பட்ட கால்நடைகள் சாவு இழப்பீடு வழங்க கோரிக்கை
மேற்பனைக்காட்டில் கடந்த சில நாட்களில் 20-க்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மேலும் இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5. மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி சாவு
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.