கிராம மக்கள் உண்ணாவிரதம்
சங்கரன்கோவில் அருகே கிராம மக்கள் உண்ணாவிரத்தில் ஈடுபட்டனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ளது கோ.மருதப்பபுரம் பஞ்சாயத்து. இந்த பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு கடந்த 6-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை கடந்த 12-ந்தேதி நடந்தது.
இந்தநிலையில் இந்த தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறியும், மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரியும் நேற்று சண்முகநல்லூர் மெயின்ரோடு ஓரத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரதத்திற்கு பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட விஜயலட்சுமி தலைமை தாங்கினார். இதில், முத்துகிருஷ்ணாபுரம், சண்முகநல்லூர் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து விஜயலட்சுமி கூறுகையில், மேலநீலிதநல்லூர் யூனியன் கோ.மருதப்பபுரம் பஞ்சாயத்து தேர்தலில் நான் போட்டியிட்டேன். எனக்கு 382 வாக்குகள் கிடைத்தது. ஆனால் என்னை விட குறைவான வாக்குகள் பெற்ற ஒருவரை வெற்றி பெற்றதாக அறிவித்து விட்டனர். எனவே, அவரை பதவி ஏற்க தடை விதிக்க வேண்டும், மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் நான் தீக்குளிப்பேன் என்றார்.
Related Tags :
Next Story