வயதான தம்பதி விஷம் குடித்து தற்கொலை


வயதான தம்பதி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 16 Oct 2021 1:37 AM IST (Updated: 16 Oct 2021 1:37 AM IST)
t-max-icont-min-icon

முக்கூடல் அருகே, வளர்ப்பு மகனால் விரக்தி அடைந்த வயதான தம்பதி விஷம் குடித்து தற்கொைல செய்து கொண்டனர்.

முக்கூடல்:
முக்கூடல் அருகே, வளர்ப்பு மகனால் விரக்தி அடைந்த வயதான தம்பதி விஷம் குடித்து தற்கொைல செய்து கொண்டனர்.

வயதான தம்பதி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சி.எஸ்.ஐ. ஆலய தெருவைச் சேர்ந்தவர் சின்னமணி (வயது 70), விவசாயி. இவருடைய மனைவி மாரியம்மாள் (65). இவர்களுக்கு குழந்தைகள் இல்லாமல் இருந்தது. இதனால் அஜித்குமார் என்பவரை எடுத்து வளர்த்து வந்தனர். அஜித்குமாருக்கு தற்போது 25 வயது ஆகிறது. திருமணம் ஆகவில்லை.

அஜித்குமார் அடிக்கடி குடித்து விட்டு வந்து தகராறு செய்துள்ளார். இதனால் சின்னமணியும், மாரியம்மாளும் வாழ்க்கையில் விரக்தி அடைந்து காணப்பட்டனர்.

விஷம் குடித்து தற்கொலை

வளர்ப்பு மகன் அஜித்குமார் தொல்லை தாங்காமல் சின்னமணியும், மாரியம்மாளும் முக்கூடல் அருகே பாப்பாக்குடி பக்கமுள்ள இலந்தைகுளத்தில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர்.

இந்த நிலையில் இலந்தைகுளத்தில் உள்ள தோட்டத்தில் கடந்த 13-ந் தேதி கணவனும், மனைவியும் விஷம் குடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். தகவல் அறிந்ததும் பாப்பாக்குடி போலீசார் சென்று இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சின்னமணி இறந்தார். நேற்று மாரியம்மாள் இறந்தார்.

இதுகுறித்து பாப்பாக்குடி போலீஸ் நிலையத்தில் சின்னமணியின் சகோதரர் சுயம்பு புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story