குப்பைகள் அகற்றப்பட்டன


குப்பைகள் அகற்றப்பட்டன
x

குப்பைகள் அகற்றப்பட்டன

குப்பைகள் அகற்றப்பட்டன
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள ராஜகிரி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள வடக்கு தெருவில் குப்பைகள் தேங்கி கிடந்தன.மேலும், அங்கு வைக்கப்பட்டிருந்த குப்பைத்தொட்டிகளில் குப்பைகள் நிறைந்து வழிந்தன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. இதன்காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியானது. இதனையடுத்து ராஜகிரி வடக்குத்தெருவில் தேங்கி கிடந்த குப்பைகள் அகற்றப்பட்டன.மேலும், குப்பைத்தொட்டிகளில் நிறைந்து வழிந்த குப்பைகளும் அள்ளப்பட்டதை தொடந்து அந்த பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார்பெட்டிக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

தஞ்சை ஆடக்காரத்தெரு பகுதியில் உள்ள சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. குறிப்பாக மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கின்றன. மேலும், தேங்கி கிடக்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.அதுமட்டுமின்றி மழைநீர் தேங்கி கிடப்பதால் இரவு நேரங்களில் சாலையில் உள்ள பள்ளங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர்.எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தஞ்சையை அடுத்த காசவளநாடுபுதூர் பகுதியில் உள்ள சாலை பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால், சாலையில் மழைநீர் தேங்கி கிடக்கின்றன. மழைநீர் வடிவதற்கு வழி இல்லாத காரணத்தினால் மழைநீர் நாளடைவில் கழிவுநீர் போல் மாறிவிடுகின்றன. இதில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. மேலும், அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் உள்ள சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் .

Next Story