அண்ணனை கொலை செய்த தம்பி கைது
அண்ணனை கொலை செய்த தம்பி கைது செய்யப்பட்டார்
பொன்மலைப்பட்டி
திருச்சி அரியமங்கலம் உக்கடை பகுதியை சேர்ந்தவர் கார்மேகம் (வயது 52). காவலாளி. இவரது தம்பி வெங்கடேசன் (33). உள் அரியமங்கலம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த 1-ந் தேதி அண்ணன் கார்மேகம் வீட்டிற்கு வெங்கடேசன் சென்றுள்ளார். அங்கு அவர்களுக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த வெங்கடேசன், கார்மேகத்தை பிடித்து கீழே தள்ளி விட்டார். அப்போது அருகிலிருந்த இரும்பு கதவில் மோதியதால் கார்மேகத்தின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து கார்மேகத்தை உறவினர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று கார்மேகம் உயிரிழந்தார். இதன் காரணமாக இந்்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய அரியமங்கலம் போலீசார் வெங்கடேசனை நேற்று கைது செய்தனர்.
Related Tags :
Next Story