வீட்டில் ரூ.3 லட்சம்- 10 பவுன் நகைகள் திருட்டு


வீட்டில் ரூ.3 லட்சம்- 10 பவுன் நகைகள் திருட்டு
x
தினத்தந்தி 16 Oct 2021 2:50 AM IST (Updated: 16 Oct 2021 2:50 AM IST)
t-max-icont-min-icon

வீட்டில் ரூ.3 லட்சம்- 10 பவுன் நகைகள் திருட்டுபோனது.

பாடாலூர்:

கோவிலுக்கு சென்றனர்
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமத்தை சேர்ந்தவர் நடேசன். இவருடைய மகன் சதீஷ்குமார்(வயது 35). நேற்று முன்தினம் இரவு இவர், ஆயுத பூஜையை முன்னிட்டு வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்துடன் அதே கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.
பிறகு அங்கிருந்து புறப்பட்டு நள்ளிரவில் வீடு திரும்பினார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பணம்- நகை திருட்டு
மேலும் பீரோக்கள் திறந்து கிடந்தன. இதையடுத்து பீரோவில் இருந்த ரூ.3 லட்சத்தையும், 10 பவுன் நகைகளையும் மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிந்து, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Next Story