தளி அருகே கவுரம்மா கோவில் திருவிழா ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்


தளி அருகே  கவுரம்மா கோவில் திருவிழா ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 16 Oct 2021 11:08 AM IST (Updated: 16 Oct 2021 11:08 AM IST)
t-max-icont-min-icon

தளி அருகே கவுரம்மா கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தேன்கனிக்கோட்டை:
தளி அருகேயுள்ள கும்ளாபுரம் கிராமத்தில் கவுரம்மா கோவில் தேர்த்திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை, அலங்காரம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு பட்டுத்துணிகள் உடுத்தி பூக்களால் அலங்காரம் செய்து மாலைகள் அணிவிக்கப்பட்டன. பின்னர் கவுரம்மா அம்மன், விநாயகர் உள்ளிட்ட தெய்வங்கள் மேள தாளங்களுடன் எடுத்து செல்லப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தேர்களில் ஏற்றி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
தொடர்ந்து 2 தேர்களையும் அங்கு திரண்டு இருந்த பக்தர்கள் வடம் பிடித்து ஊர்வலமாக இழுத்து சென்றனர். கும்ளாபுரம் கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக சென்ற தேர்கள் முடிவில் கவுரம்மா ஏரியை சென்றடைந்தது. அங்கு கவுரம்மா அம்மனை கிராமமக்கள் ஏரியில் உள்ள நீரில் கரைத்தனர். இந்த திருவிழாவில் ஓசூர், தேன்கனிகோட்டை, தளி மற்றும் கர்நாடகா பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story