முத்துமாலை அம்மன் கோவிலில் தசரா திருவிழா
சிறுத்தொண்டநல்லுர் முத்துமாலை அம்மன் கோவிலில் தசரா திருவிழா நடந்தது.
ஏரல்:
ஏரல் அடுத்துள்ள சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோவில் புகழ்பெற்ற கோவிலாகும். இக்கோவிலில் தசரா திருவிழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. அதிகாலை 2 மணிக்கு அம்மன் கற்பகபொன் சப்பரத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்தாா். நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். வீதிஉலா சென்ற அம்மன் நேற்று அதிகாலை ஏரல் நட்டார் அம்மன் கோவில் வந்தடைந்தது. அங்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது.
அதனை தொடர்ந்து ஏரல் சவுக்கை அம்மன் கோவில், மெயின் பஜார் வழியாக வந்து தனது பேட்டையில் அமர்ந்தது. பேட்டையில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. இரவு அம்மன் நகர்வலம் புறப்பட்டு இன்று அதிகாலை கோவில் வந்தடைந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story