கம்பத்தில் பலத்த மழை தொழிலாளி வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது


கம்பத்தில் பலத்த மழை  தொழிலாளி வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது
x
தினத்தந்தி 16 Oct 2021 8:27 PM IST (Updated: 16 Oct 2021 8:27 PM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் பலத்த மழை காரணமாக தொழிலாளி வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.


கம்பம்:
கம்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை 10 மணி வரை வானம் மேக மூட்டமாக இருந்தது. பின்னர் சிறு சாரலுடன் தொடங்கிய மழை பலத்த மழையாக மாறி சுமார் 3 மணிநேரம் இடைவிடாது பெய்தது. இதனால் கம்பம் பத்திரபதிவு அலுவலகம், உத்தமபுரம், காமயகவுண்டன்பட்டி சாலை, வன அலுவலக சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. 
பலத்த மழை காரணமாக கம்பம் மாலையம்மாள்புரத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்ற தொழிலாளியின் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. யாருக்கும் உயிர்சேதம் ஏற்படவில்லை.



Next Story