கிணற்றில் பிணமாக மிதந்த பள்ளி மாணவர்
கோவில்பட்டி அருகே கிணற்றில் பள்ளி மாணவர் பிணமாக மிதந்தார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே கிணற்றில் பள்ளி மாணவர் பிணமாக மிதந்தார்.
பள்ளி மாணவர்
கோவில்பட்டி திலகர் நகர் பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 50). இவருடைய மனைவி சண்முகசுந்தரி. இவர்களுடைய மகன் பசுபதி தினேஷ் (16). மகள் கலைமகள் (12). இவர்கள் முறையே 10-ம் வகுப்பு, 7-ம் வகுப்பு படித்து வந்தனர்.
கடந்த 14-ந்தேதி மாலையில் பசுபதி தினேஷ் என்.சி.சி வகுப்புக்கு செல்கிறேன் என்று தாயிடம் சொல்லி விட்டு சென்றவர், வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் பயந்து போன அவரது பெற்றோர் பல இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுபற்றி கோவில்பட்டி மேற்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் பல இடங்களில் பசுபதி தினேசை தேடினர்.
கிணற்றில் பிணமாக மிதந்தார்
இந்த நிலையில் நேற்று சாலைப்புதூர் பகுதியில் உள்ள கிணற்றில் மாணவர் பசுபதி தினேஷ் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் ஹரிகண்ணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு படையினர் அதிகாரி அருள்ராஜ் தலைமையில் வீரர்கள் வந்து மாணவர் உடலை மீட்டனர்.
பின்னர் பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு பசுபதி தினேஷ் உடல் அனுப்பி வைக்கப் பட்டது.
நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கும்போது தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story