சாலையில் குளம்போல் தேங்கி உள்ள கழிவுநீர்
சாலையில் குளம்போல் தேங்கி உள்ள கழிவுநீர்
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பெரும்பாலான இடங்களில் 4-வது திட்ட குடிநீர், பாதாள சாக்கடை உள்ளிட்ட பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகளால் சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. குறிப்பாக திருப்பூர் அங்கேரிபாளையம் சாலை மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. குறிப்பாக பழைய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே சாலையில் ஏராளமான பள்ளங்கள் இருப்பதுடன், சாலையில் கழிவுநீர் குளம் போல தேங்கி உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருப்பதுடன், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே உடனடியாக சாலையை செப்பனிட்டு, தார்ச்சாலை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story