சீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம்
சீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம்
அவினாசி
திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம், ராயம்பாளைம் செல்லும் வழியில் சங்கமாங்குளம் அருகே சீனிவாசப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையான நேற்று ஸ்ரீசீனிவாச பெருமாள் ஆலயத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீசீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யான வைபவம் நடைபெற்றது. சுவாமி சிறப்பு அலங்கார தோற்றத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ராயம்பாளையம், சின்னேரிபாளையம், வளையபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டும் திருக்கல்யாணத்தையொட்டியும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story