காங்கேயம் பகுதிகளில் நேற்று பரவலான மழை
காங்கேயம் பகுதிகளில் நேற்று பரவலான மழை
காங்கேயம்,
காங்கேயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பரவலான மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கனமழை
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக நேற்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. இதன் காரணமாக காங்கேயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
இதை தொடர்ந்து மதியம் 2.30 மணியளவில் தூறல் போட தொடங்கியது. அதன்பின் படிப்படியாக வேகமெடுத்து இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
விவசாயிகள் மகிழ்ச்சி
காங்கேயம் நகரில் சென்னிமலை சாலை, திருப்பூர் சாலை, கரூர் சாலை, கோவை சாலை, பழைய கோட்டை சாலை, தாராபுரம் சாலை, பஸ் நிலைய ரவுண்டானா, போலீஸ் நிலைய ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழை காரணமாக மழைநீர் பெருக்கெடுத்து சாலையில் ஓடியது. இதனால் சாலையில் சென்ற வாகனங்கள் தண்ணீரில் மிதந்தபடி சென்றன. மேலும் காங்கேயம் நகரின் பல இடங்களில் மழை நீர் குளம்போல் தேங்கி நின்றது.
இதேபோல காங்கேயம் நகர் தவிர சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்தது. இதனால் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
Related Tags :
Next Story