178 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்


178 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 16 Oct 2021 9:56 PM IST (Updated: 16 Oct 2021 9:56 PM IST)
t-max-icont-min-icon

178 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

திருப்பூர், 
திருப்பூர் மாவட்டத்தில் 178 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது.
நாளை தடுப்பூசி முகாம்
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மாவட்ட நிர்வாகம் தடுப்பூசி பணிக்கு முக்கியத்துவம் அளித்து 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதன்படி நாளை (திங்கட்கிழமை) கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்டம் முழுவதும் நடைபெறுகிறது.
அதன்படி அவினாசி, குன்னத்தூர், திருப்பூர், பல்லடம், பொங்கலூர், குண்டடம், காங்கேயம், வெள்ளகோவில், மூலனூர், தாராபுரம், கணியூர், குடிமங்கலம், உடுமலை ஆகிய ஒன்றியங்களில் மொத்தம் 151 இடங்களில் முகாம் நடக்கிறது. இதில் 28 ஆயிரத்து 180 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், 3 ஆயிரத்து 430 பேருக்கு கோவேக்சின் தடுப்பூசியும் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சி
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் அண்ணா நெசவாளர் காலனி, குருவாயூரப்பன் நகர், கோவில்வழி, எல்.ஆர்.ஜி. புதுராமகிருஷ்ணாபுரம், மேட்டுப்பாளையம், நெருப்பெரிச்சல், நெசவாளர்காலனி, பி.ஆர்.எம். ஹோம், பெரியாண்டிப்பாளையம், சூசையாபுரம், சுண்டமேடு, தொட்டிய மண்ணரை, டி.எஸ்.கே.காலனி, தென்னம்பாளையம் கே.வி.ஆர்.காலனி, வீரபாண்டி, 15 வேலம்பாளையம், நல்லூர் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் 8 ஆயிரத்து 500 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், 820 பேருக்கு கோவேக்சின் தடுப்பூசியும் நாளை செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஜல்லிப்பட்டி, ஊத்துக்குளி, அவினாசி, தாராபுரம், காங்கேயம், பல்லடம், மடத்துக்குளம், உடுமலை, கரடிவாவி ஆகிய அரசு ஆஸ்பத்திரிகளில் 900 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், 660 பேருக்கு கோவேக்சின் தடுப்பூசியும் செலுத்தப்பட உள்ளது. திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 1,000 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், 500 பேருக்கு கோவேக்சின் தடுப்பூசியும் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

Next Story