தினத்தந்தி புகார் பெட்டி
நாகை, திருவாரூர்,மயிலாடுதுறை, காரைக்கால் பகுதிகளில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
மின்வெட்டால் பொதுமக்கள் அவதி
நாகையை அடுத்த ராராந்திமங்கலம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனனர். இந்த பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் வீடுகளில் உள்ள குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.எனவே, ராராந்திமங்கலம் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.
-கோகுலகிருஷ்ணன், ராராந்திமங்கலம்.
பொது கழிவறை கட்டிட வசதி வேண்டும்
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை அடுத்த அகரதிருமாளம் ஊராட்சி பகுதியில் பூந்தோட்டம் கடைத்தெரு உள்ளது. இந்த பகுதியில் பொது கழிவறை வசதி இல்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள பெண்கள், குழந்தைகள் முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.மேலும், கழிவறை வசதி இல்லாததால் பொதுமக்கள் திறந்தவெளியை பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களின் நலன் கருதி பூந்தோட்டம் கடைத்தெரு பகுதியில் பொது கழிவறை கட்டிடம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-பாலு, செருவளூர்.
பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை
மயிலாடுதுறையை அடுத்த விளநகர் பகுதியில் பொதுமக்கள் வசதிக்காக விளநகர் பிள்ளையார் கோவில் பஸ்நிறுத்தம் அமைக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் இருந்து வேலைக்கு செல்பவர்கள், மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்பவர்கள், கல்லூரி பள்ளி மாணவ-மாணவிகள், அந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு வரும் பக்தர்கள் பயனடைந்து வந்தனர். ஆனால் சமீபகாலமாக விளநகர் பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நின்று செல்வது இல்லை. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள், கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளநகர் பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நின்று செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.
-பொதுமக்கள், விளநகர்.
பஸ் வசதி வேண்டும்
காரைக்காலில் இருந்து நெடுங்காடு வழியாக மயிலாடுதுறைக்கு புதுவை அரசின் பி.ஆர்.டி. பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன.கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த பஸ் சேவை நிறுத்தப்பட்டது.தற்போது கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தனியார் மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.ஆனாலும் புதுவை அரசின் பி.ஆர்.டி. பஸ்கள் காரைக்காலில் இருந்து நெடுங்காடு வழியாக மயிலாடுதுறைக்கு இயக்கப்படவில்லை. இதனால் நெடுங் காட்டிலிருந்து நல்லாடை, செம்பனார்கோவில் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள் சிரம்மத்திற்குள்ளாகி வருகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதுவை அரசின் பி.ஆர்.டி. பஸ்களை மீண்டும் காரைக்காலிலிருந்து நெடுங்காடு வழியாக மயிலாடுதுறைக்கு இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
- பொதுமக்கள், மயிலாடுதுறை.
சாலையின் நடுவே மின்கம்பம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சி சுற்றுலா மாளிகை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் உள்ள திருமணமண்டபம் அருகே இரும்பாலான மின்கம்பம் உள்ளது. சாலையின் நடுவே மின்கம்பம் உள்ளதால் அந்த பகுதி வழியாக செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் வருவோர் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையின் நடுவே உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு சாலையோரம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பொதுமக்கள், சீர்காழி.
சாலையின் நடுவே பள்ளம்
நாகை மாவட்டம் நாகூர் மெயின் சாலையில் ஆங்காங்கே சாலையின் நடுவே பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த பழங்களினால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக மழைக்காலங்களில் சாலையின் நடுவே உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்குவதால் வாகனங்கள் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே உயிர்பலி எதுவும் ஏற்படும் முன்பு நாகூர் மெயின் சாலையில் உள்ள பள்ளங்களை மூடி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
-பன்னீர்செல்வம், நாகூர்.
சாலையில் தேங்கும் மழைநீர்
திருவாரூரை அடுத்த அடியக்கமங்கலம் ஊராட்சி 1-வது வார்டு ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள அஹமதியா தெருவில் மழைநீர் வடிகால் வசதி இல்லை. இதன் காரணமாக மழைக்காலங்களில் மழைநீர் சாலையில் குளம் போல் தேங்கி நிற்கின்றன. அதுமட்டுமின்றி மழைநீர் அந்த பகுதியில் உள்ள வீடுகளை சூழ்ந்து கொள்கின்றன.தேங்கி கிடக்கும் மழைநீரில் இருந்துவிஷப்பூச்சிகள் வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றனர் இதனால் வீடுகளில் உள்ள பெண்கள், குழந்தைகள் மிகுந்த அச்சத்துடன் காணப்படுகின்றனர்.மேலும், தேங்கி கிடக்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன.இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள அஹமதியா தெருவில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்காமல் இருக்க மழைநீர் வடிகால் அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-அப்துல் அஜீஸ். அடியக்கமங்கலம்.
சாலை சீரமைக்கப்படுமா?
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த மேலவாசல் பகுதியில் உள்ள குமரபுரம் சாலை பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலை வழியாக தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் மேலவாசல், எடையர் எம்பேத்தி, காரிக்கோட்டை ஆகிய ஊர்களுக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் சாலை குண்டும், குழியுமாக இருப்புதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிவருகின்றனர்.அதுமட்டுமின்றி சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன.எனவே, உயிர்பலி எதுவும் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குமரபுரம் சாலையை சீரமைத்து தர வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
-பொதுமக்கள், மேலவாசல்.
Related Tags :
Next Story