பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டவர் கைது


பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டவர் கைது
x
தினத்தந்தி 17 Oct 2021 12:08 AM IST (Updated: 17 Oct 2021 12:08 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டவர் கைது செய்யப்பட்டார்.

சிங்கம்புணரி,

திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 39). இவர் 2014-ம் ஆண்டு சிங்கம்புணரியில் ஒரு அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமீன் பெற்ற நிலையில் அதற்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. மணிகண்டனை கைது செய்து ஆஜர்படுத்த சிங்கம்புணரி மாஜிஸ்திரேட்டு பிடிவாரண்டு பிறப்பித்தார். இதன்பேரில் சிங்கம்புணரி போலீசார் சென்னை சென்று அங்கு தலைமறைவாக இருந்த மணிகண்டனை கைது செய்தனர். அவர் சிங்கம்புணரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருப்பத்தூர் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.


Next Story