கொலை வழக்கில் கைதான 9 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கொலை வழக்கில் கைதான 9 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 17 Oct 2021 12:27 AM IST (Updated: 17 Oct 2021 12:27 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே கொைல வழக்கில் கைதான 9 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

நெல்லை:
நெல்லை அருகே கொலை வழக்கில் கைதான 9 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

2 பேர் கொலை

நெல்லை முன்னீர்பள்ளம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மாரியப்பன், சங்கர சுப்பிரமணியன் ஆகிய 2 பேரும் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மாரியப்பன் கொலை தொடர்பாக கீழச்செவல் வெள்ளாங்குடி தெருவை சேர்ந்த செல்லக்குட்டி மகன் அய்யப்பன் (வயது 20), பிராஞ்சேரியைச் சேர்ந்த வேல்முருகன் (28), கீழச்செவல் பெருமாள் கோவில் சன்னதி தெருவைச் சேர்ந்த பேச்சிமுத்து (20), மேலச்செவல் கீழ ரதவீதியைச் சேர்ந்த சிவா என்ற மொட்டை சிவா (24), மேலச்செவல் ரஸ்தா வடக்கு தெருவைச் சேர்ந்த சிவா (23) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

குண்டர் சட்டம்

சங்கர சுப்பிரமணியன் கொலை வழக்கில் கொத்தன்குளம் இந்திரா காலனியை சேர்ந்த மந்திரம் மகன் மகாராஜன் என்ற ராஜா (20), கண்ணன் மகன் சீயான் பாண்டியன் (31), கணபதி மகன் பிரபாகரன் (26), நெல்லை டவுன் பாறையடியைச் சேர்ந்த சீதா ராமகிருஷ்ணன் (24) ஆகிய 4 பேரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் கொலை வழக்குகளில் தொடர்புடைய 9 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதனை ஏற்று 9 பேரையும் குண்டர்  சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு கடிதங்களை கோவை, திருச்சி சிறைகளில் போலீசார் வழங்கினர்.

Next Story