களக்காடு தலையணைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை
வெள்ளப்பெருக்கு காரணமாக களக்காடு தலையணைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
களக்காடு:
வெள்ளப்பெருக்கு காரணமாக களக்காடு தலையணைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
தலையணை மூடல்
நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழை காரணமாக தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தடுப்பணையை மூழ்கடித்தபடி வெள்ளம் செல்கிறது.
இதையடுத்து களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஸ்வரன் உத்தரவின் பேரில் களக்காடு தலையணை மூடப்பட்டது. சுற்றுலா பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சேரன்மாதேவி
இதேபோல் சேரன்மாதேவி, மேலச்செவல், பத்தமடை, வீரவநல்லூர், முக்கூடல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை 9 மணி முதல் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் சேரன்மாதேவி, பத்தமடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள், மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story