தேக்கு மரங்களை கடத்த முயன்ற 2 பேர் கைது
தினத்தந்தி 17 Oct 2021 12:47 AM IST (Updated: 17 Oct 2021 12:47 AM IST)
Text Sizeதேக்கு மரங்களை கடத்த முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அச்சன்புதூர்:
கடையநல்லூர் வனச்சரகர் சுரேஷ் உத்தரவின்பேரில், வனவர்கள் அம்பலவாணன், செல்லத்துரை, வனக்காப்பாளர் முத்துசாமி உள்ளிட்ட வனத்துறையினர் பண்பொழி வனப்பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு மலைப்பகுதியில் சரிந்து கிடந்த 2 தேக்கு மரங்களை வெட்டி கடத்த முயன்றதாக, மேக்கரை தேன்பாறை தேரி தெருவைச் சேர்ந்த முருகன் மகன் மணிகண்டன் (வயது 32), மேக்கரை தானிமரத் தெருவைச் சேர்ந்த லட்சுமணன் மகன் மற்றொரு மணிகண்டன் (30) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களுக்கு தலா ரூ.45 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire