வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி
வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஜெயங்கொண்டம்
வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அண்மையில் வானிலை மையம் அறிவித்து இருந்தது. அதன்படி கடந்த இரண்டு நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வெப்பம் தாங்க முடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் மாலை வரை வெப்பத்தின் தாக்கம் சற்று கூடுதலாக காணப்பட்டது. மேலும் புழுக்கம் அதிகரித்து காற்று இல்லாத சூழ்நிலை நிலவியது. இந்நிலையில் மாலை சுமார் 4 மணி அளவில் பெய்த மழை ஒரு மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் ஓடி குளம், குட்டை, ஏரிகளில் சென்றடைந்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story