நிலத்தகராறில் முதியவர் கைது
நிலத்தகராறில் முதியவர் கைது செய்யப்பட்டார்.
மீன்சுருட்டி
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள குருவாலப்பர் கோவில் வாண்டையார் தெருவை சேர்ந்தவர் தவசாமி(வயது 65) என்பவருக்கும், அதே தெருவைச் சேர்ந்தவர் நாராயணசாமிக்கும்(70) இடையே நிலப்பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது. நிலப்பிரச்சினை சம்பந்தமாக மீன்சுருட்டி போலீசில் தவசாமி புகார் கொடுத்ததாக தெரிகிறது. மீன்சுருட்டி போலீசார் இருதரப்பினரையும் விசாரணை நடத்தியதில் சர்வேயர் வைத்து அளந்து அவர் காட்டும் அளவுபடி அனுபவம் செய்து கொள்கிறோம் என்று இரு தரப்பினரும் சமாதானமாக எழுதிக் கொடுத்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த 14-ந் தேதி நாராயணசாமி நான்கு கூலியாட்களை வைத்து அந்த இடத்தில் வேலை செய்ததாக தெரிகிறது.
இதை அறிந்த தவசாமி சர்வேயர் அளந்து கொடுக்காமல் ஏன் அந்த இடத்தில் வேலை செய்கின்றீர்கள் என்று கேட்டதற்கு, நாராயணசாமி அருகில் கிடந்த கட்டையால் தவசாமியை தாக்கியதில் பலத்த காயமடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் தவசாமியை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தவசாமி கொடுத்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணவாளன் வழக்குப்பதிவு செய்து நாராயணசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
Related Tags :
Next Story