அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 4 பேர் கைது
வெம்பக்கோட்டை பகுதியில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தாயில்பட்டி,
தீபாவளி பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு பட்டாசு உற்பத்தி தீவிரம் அடைந்து வருகிறது. இந்தநிலையில் வீடுகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கும் பணியும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக வெம்பக்கோட்டை போலீசாருக்கு புகாா்கள் வந்தன. தாயில்பட்டி, சல்வார்பட்டி, இறவார்பட்டி, விஜயகரிசல்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வெம்பக் கோட்டை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இறவார்பட்டியை சேர்ந்த அய்யனார் (வயது 40), முருகேசன் (35), சல்வார் பட்டியை சேர்ந்த மாரிமுத்து (50), விஜயகரிசல்குளத்தை சேர்ந்த குருசாமி (45) ஆகிய 4 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த தலா 20 கிலோ சரவெடிகளையும் போலீசார் கைப்பற்றினர்.
Related Tags :
Next Story