குப்பைத்தொட்டிகள் வேண்டும்


குப்பைத்தொட்டிகள் வேண்டும்
x
தினத்தந்தி 17 Oct 2021 2:35 AM IST (Updated: 17 Oct 2021 2:35 AM IST)
t-max-icont-min-icon

குப்பைத்தொட்டிகள் வேண்டும்

  தஞ்சை மாவட்டம் புதிய பஸ் நிலையம் அருகே காவேரி நகர் பகுதி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் காவேரி நகர் பகுதியில் போதுமான அளவுக்கு குப்பைத்தொட்டிகள் இல்லை. இதன் காரணமாக பொதுமக்கள் குப்பைகளை சாலையோரத்திலும், வீடுகளுக்கு அருகேயும் குவித்து வைத்து வருகின்றனர். இதனால் மழைக்காலங்களில் குப்பைகளில் மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, பொதுமக்களின் நலன் கருதி காவேரி நகர் பகுதியில் குப்பைத்தொட்டிகள் வைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் .                                            
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த அத்திவெட்டி பகுதியில் அரசினர் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தால் அத்திவெட்டி பகுதி மக்கள் மட்டுமின்றி இளங்காடு, சிரமேல்குடி, கல்யாண ஓடை, பழவேரிக்காடு, வாட்டாகுடி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களும் பயனடைந்து வந்தனர். இந்த நிலையில் தற்போது ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு வருபவர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும்.மேலும், ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் டாக்டர்கள், செவிலியர்கள் பணிபுரிய வழிவகை செய்ய வேண்டும்.அதுமட்டுமின்றி, ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து தரம் உயர்த்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.   

தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டி சாந்திநகர் பகுதியில் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் வடிகால் வசதி இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குடியிருப்பு பகுதியில் குளம் போல் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் கழிவுநீர் வடிகால் வசதி செய்து தர வேண்டும் 

  கும்பகோணத்தை அடுத்த மாத்தி சாக்கோட்டை சாலையில் வாய்க்கால் ஒன்று உள்ளது. தற்போது இந்த வாய்க்கால் பராமரிப்பின்றி தூர்வாரப்படாமல் கிடைக்கிறது.இதனால் வாய்க்காலில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இதில் இருந்து விஷப்பூச்சிகள் வெளியேறி அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் காணப்படுகின்றனர்.மேலும், தேங்கி கிடக்கும் நீரில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.                                       
.                          

Next Story