மாணவியை கர்ப்பமாக்கிய டிரைவர் கைது


மாணவியை கர்ப்பமாக்கிய டிரைவர் கைது
x
தினத்தந்தி 17 Oct 2021 3:05 AM IST (Updated: 17 Oct 2021 3:05 AM IST)
t-max-icont-min-icon

மாணவியை கர்ப்பமாக்கிய டிரைவர் கைது செய்யப்பட்டார்.

வாழப்பாடி:
வாழப்பாடி அருகே உள்ள குமாரபாளையத்தை சேர்ந்தவர் கோபி மகன் பரமசிவம் (வயது 24). டிரைவர். இவருக்கும், பிளஸ்-2 மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது பரமசிவம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை பலாத்காரம் செய்தார். இதில் மாணவி 3 மாத கர்ப்பம் ஆனார். இதனிடையே பரமசிவம் கடந்த 11-ந் தேதி பள்ளிக்கு வந்த மாணவியை கடத்தி சென்றார். இதுகுறித்து மாணவியின் தந்தை வாழப்பாடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பரமசிவத்தை கைது செய்தனர். மாணவி மீட்கப்பட்டார்.

Next Story