சேலத்தில் போதை ஊசி பயன்படுத்திய வாலிபர் திடீர் சாவு


சேலத்தில் போதை ஊசி பயன்படுத்திய  வாலிபர் திடீர் சாவு
x
தினத்தந்தி 17 Oct 2021 3:29 AM IST (Updated: 17 Oct 2021 3:29 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் போதை ஊசி பயன்படுத்திய வாலிபர் திடீரென பலியானார்.

சேலம்:
சேலத்தில் போதை ஊசி பயன்படுத்திய வாலிபர் திடீரென பலியானார்.
வலி நிவாரணி
சேலம் பொன்னம்மாபேட்டை வீராணம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 23). பி.காம் பட்டதாரியான இவர், கொரோனா ஊரடங்கு காலத்தில் சேலத்தில் உள்ள ஒரு மருந்து கடையில் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் கடந்த 5 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். 
கடந்த 12-ந் தேதி மதன்குமார் தனது வீட்டின் அருகே மயங்கி விழுந்துள்ளார். இதை பார்த்த உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு பொன்னம்மாபேட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, வலி நிவாரணியாக பயன்படுத்தக்கூடிய மாத்திரையை போதைக்காக தண்ணீரில் கலந்து ஊசி மூலம் உடலில் அடிக்கடி அவர் செலுத்தி வந்தது தெரிந்தது.
பலி
இதனிடையே, மதன்குமாரின் உடல்நிலை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு நேற்று முன்தினம் இரவு அவர் திடீரென உயிரிழந்தார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டதாரி வாலிபர் மதன்குமார், பெற்றோருக்கு தெரியாமல் வலி நிவாரணி மாத்திரையை போதைக்காக பயன்படுத்தி அதற்கு அடிமையாகியுள்ளார். இதனால் அவரது உடல் மெலிந்து கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சரியாக சாப்பிடாததால் இப்படி பாதிக்கப்பட்டுள்ளதாக மதன்குமாரின் பெற்றோர் நினைத்தனர். ஆனால் டாக்டர்கள் தெரிவித்த பிறகு தான், போதை ஊசி பழக்கம் அவருக்கு இருந்தது அவரது பெற்றோருக்கு தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story