வாலாஜா ஒன்றியத்தில் 20 பெண்கள் ஊராட்சி மன்ற தலைவர்களாக தேர்வு


வாலாஜா ஒன்றியத்தில் 20 பெண்கள் ஊராட்சி மன்ற தலைவர்களாக தேர்வு
x
தினத்தந்தி 17 Oct 2021 6:11 PM IST (Updated: 17 Oct 2021 6:11 PM IST)
t-max-icont-min-icon

வாலாஜா ஒன்றியத்தில் உள்ள 36 ஊராட்சிகளில் 20 பெண்கள் ஊராட்சி மன்ற தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை

வாலாஜா ஒன்றியத்தில் உள்ள 36 ஊராட்சிகளில் 20 பெண்கள் ஊராட்சி மன்ற தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

20 பேர் பெண்கள்

பெண்களுக்கு 50 இட ஒதுக்கீடு வேண்டும் என பல்வேறு அமைப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் தற்போது வெளியான உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் வாலாஜா ஒன்றியத்தில் உள்ள 36 ஊராட்சிகளில் 20 பெண்கள் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு சாதனை படைத்துள்ளனர். இது 50 சதவீதத்துக்கும் அதிகமாகும்.

வாலாஜா ஒன்றியத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 36 ஊராட்சி மன்ற தலைவர்கள் விவரம் வருமாறு:-

ஊராட்சி மன்ற தலைவர்கள்

அனந்தலை-தேவகி, செட்டிதாங்கல்-அ.வளர்மதி, குடிமல்லூர்-அஞ்சலை, கத்தாரிகுப்பம்-பூங்கொடி, மணியம்பட்டு-நிர்மலா, மாந்தாங்கல்-ரமா, மோட்டூர்-நாகம்மாள், நவலாக்-சரஸ்வதி, பள்ளேரி-புஷ்பா, பூண்டி-கங்காபாய், சாத்தம்பாக்கம்-செல்வாம்பிகை,
சுமைதாங்கி-மஞ்சுளா, சீக்கராஜபுரம்-சியமளா, தெங்கால்-இந்திரா பத்மநாபன், திருமலைச்சேரி-தேன்மொழி, திருப்பாற்கடல்-எஸ்.பிரியா, வள்ளுவம்பாக்கம்-சின்னப்பொண்ணு, வாணாபாடி-ஈஸ்வரி, வன்னிவேடு-கற்பகராணி, வசூர்-சாந்தி,
பாகவெளி-ராமு, சென்னசமுத்திரம்-ரவி, ஏகாம்பரநல்லூர்-மகேந்திரன், கடப்பேரி-சண்முகம், கல்மேல்குப்பம்-ராஜரத்தினம், கொண்டகுப்பம்-குமார், லாலாபேட்டை-கோகுலன், மருதம்பாக்கம்-லோகநாதன், முகுந்தராயபுரம்-முருகன், முசிறி-தயாளன், நரசிங்கபுரம்-மனோகரன், படியம்பாக்கம்-கணேசன், செங்காடு-தேவேந்திரன், தகரகுப்பம்-சிவகுமார், தென்கடப்பந்தாங்கல்-பிச்சைமணி, வி.சி.மோட்டூர்-முனுசாமி.

Next Story