கோத்தகிரியில் கடும் பனி மூட்டம்


கோத்தகிரியில் கடும் பனி மூட்டம்
x
தினத்தந்தி 17 Oct 2021 7:12 PM IST (Updated: 17 Oct 2021 7:12 PM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் கடும் பனி மூட்டம்

கோத்தகிரி

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை முதல் மழை பெய்யாவிட்டலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் திடீரென கடும் பனிமூட்டம் காணப்பட்டது. 

தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் நீலகிரி மாவட்டதிற்கு வாகனங்கள் மூலம் வந்திருந்ததால், கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலை மற்றும் கோடநாடு காட்சி முனைக்கு செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் பனி மூட்டம் நிலவியதன் காரணமாக வாகனங்களில் முகப்பு விளக்கை எரியவிட்டபடி டிரைவர்கள் சென்றனர். போக்குவரத்து போலீசார் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.


Next Story