பந்தலூரில் பலத்த மழை
பந்தலூரில் பலத்த மழை
பந்தலூர்
பந்தலூர், உப்பட்டி, பொன்னானி, பிதிர்காடு, நெலாக்கோட்டை, கரியசோலை, தேவாலா, சேரம்பாடி, எருமாடு, தாளூர், அய்யன்கொல்லி, கொளப்பள்ளி, பாட்டவயல், நம்பியார்குன்னு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் நேற்று வரை விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதனால் பொன்னானி, சோலாடி உள்ளிட்ட ஆறுகளிலும், நீரோடைகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. விவசாய நிலங்களையும் மழை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. பந்தலூர் பஜாரில் உள்ள சாலை வெள்ளக்காடானது.
இதனால் வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தபடி சென்றன. மேலும் பல்வேறு இடங்களில் மின்கம்பிகள் மீது மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது. சாலையோரங்களில் சிறிய அளவில் மண்சரிவு ஏற்பட்டு வருகின்றன. தொடர்ந்து மழை பெய்து வருவதால், கடுங்குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story