விளாததிகுளம் அருகே புரோட்டா மாஸ்டரிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்த லாரி டிரைவர் கைது


விளாததிகுளம் அருகே  புரோட்டா மாஸ்டரிடம் கத்தியை காட்டி மிரட்டி  வழிப்பறி செய்த லாரி டிரைவர் கைது
x
தினத்தந்தி 17 Oct 2021 7:46 PM IST (Updated: 17 Oct 2021 7:46 PM IST)
t-max-icont-min-icon

விளாததிகுளம் அருகே புரோட்டா மாஸ்டரிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்த லாரி டிரைவரை போலீசார் கைது செயதனர்

எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே மோட்டார் சைக்கிளில் லிப்டு கொடுத்த புரோட்ட மாஸ்டரிடம் கத்தியை காட்டி வழிப்பறி செய்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
புரோட்டா மாஸ்டர்
 விளாத்திகுளம் அருகே உள்ள ஜமீன்செங்கல்படை கிராமத்தினை சேர்ந்தவர் முருகன் (வயது 55). இவர் விளாத்திகுளத்தில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டாராக பணியாற்றி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கடையில் வேலையை முடித்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பியுள்ளார். எட்டயபுரம் சாலையில் சென்று கொண்டு இருந்த போது கே.குமரெட்டியாபுரம் கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் ரமேஷ்குமார் (35) என்பவர், வழிமறித்து சுப்பிரமணியபுரம் வரை செல்ல வேண்டும் என்று லிப்டு கேட்டுள்ளார். இரவு நேரம் என்பதால் இரக்கப்பட்டு முருகனும் லிப்டு கொடுத்துள்ளார். 
கத்தியை காட்டி வழிப்பறி
சுப்பிரமணியபுரம் வந்ததும் ரமேஷ்குமார் இறங்கமால் தான் மது அருந்தியுள்ளதாகவும், தன்னால் ஊருக்கு நடந்து போக முடியாது, இந்த நேரத்தில் பஸ்சும் கிடையாது, சகோதரனாக நினைத்து தன்னை கே.குமரெட்டியபுரம் விலக்கு வரை மட்டும் விட்டு செல்லுமாறு முருகனிடம் காலில் விழாத குறையாக பவ்வியமாக கொஞ்சி உள்ளார். முருகனும் இரக்கப்பட்டு, அழைத்துச் சென்றுள்ளார். கே.குமரெட்டியபுரம் விலக்கு அருகே சென்றதும் அதுவரை பவ்வியமாக பேசிவந்த ரமேஷ்குமார் ஊருக்குள் கொண்டு போய் விடு என்று முருகனை மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த முருகன் அதெல்லாம் முடியாது, நான் ஊருக்கு போக வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் ரமேஷ்குமார் திடீரென்று மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, முருகன் கழுத்தின் பின் பகுதியில் வைத்து மிரட்ட தொடங்கியுள்ளார். 
கைது
மேலும் முருகன் பையில் வைத்திருந்த ரூ350 மற்றும் அவர் வீட்டில் சாப்பிடுவதற்காக கொண்டு சென்ற சாப்பாடு பார்சல் பறித்துள்ளார். மேலும், மோட்டார் சைக்கிளையும் பறிக்க முயன்ற ரமேஷ்குமாரிடம் முருகன் தப்பினாராம். இதுகுறித்து முருகன் கொடுத்த புகாரின் பேரில் விளாத்திகுளம் போலீசார், ரமேஷ்குமாரை கைது செய்தனர். அவர் மீது ஏற்கனவே வழிப்பறி மற்றும் அடிதடி என 5 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

Next Story