திண்டுக்கல் மாவட்டத்தில் அ.தி.மு.க. பொன்விழா கொண்டாட்டம்


திண்டுக்கல் மாவட்டத்தில் அ.தி.மு.க. பொன்விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 17 Oct 2021 8:43 PM IST (Updated: 17 Oct 2021 8:43 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் அ.தி.மு.க. பொன்விழா கொண்டாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் :
அ.தி.மு.க. 50-வது ஆண்டு தொடங்குவதையொட்டி பொன்விழா கொண்டாட்டம் திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலை முன்பு நடந்தது. இதற்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் மருதராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையடுத்து எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தனர். அதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதையடுத்து நத்தம் சாலையில் அமைந்துள்ள அ.தி.மு.க. கட்சி அலுவலக வளாகத்தில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. உதயகுமார், அபிராமி கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பாரதிமுருகன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் வீரமார்பன், அ.தி.மு.க. இளைஞரணி மாவட்ட செயலாளர் வி.டி.ராஜன், முன்னாள் ஆவின் தலைவர் திவான்பாட்ஷா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
திண்டுக்கல் ஸ்கீம் ரோட்டில் அ.தி.மு.க. பொதுக்குழு முன்னாள் உறுப்பினர் நெப்போலியன் தலைமையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர்தூவி பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. இந்த விழாவுக்கு முன்னாள் மாவட்ட இளைஞர் அணி தலைவர் திருமாறன் முன்னிலை வகித்தார். இதில் கிழக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் முத்தையா, மாவட்ட மாணவர் அணி செயலாளர் சின்னு மற்றும் நிர்வாகிகள் நாகராஜ், முனுசாமி, கணேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கொடைக்கானல்
கொடைக்கானல் நகர அ.தி.மு.க. சார்பில் நகரின் பல்வேறு இடங்களில் கட்சி கொடி ஏற்றப்பட்டு பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு  வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளுக்கு நகர அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் நகரசபை தலைவருமான எம்.ஸ்ரீதர் தலைமை தாங்கினார். முன்னாள் நகரசபை தலைவர் வி.எஸ்.கோவிந்தன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் நகர அவைத்தலைவர் ஜான் தாமஸ், முன்னாள் அவைத்தலைவர் வெங்கட்ராமன், கூட்டுறவு நகர வங்கி தலைவர் சுதாகர்பிரபு, மாவட்ட பிரதிநிதி ஆவின் பாரூக், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் பிச்சை, நகர துணை செயலாளர் ஜாபர் சாதிக், மருத்துவ அணி நிர்வாகி டாக்டர் கணேஷ், மகளிர் அணியை சேர்ந்த ராணிதங்கம், பாண்டியம்மாள், ஆண்டாள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 
கோபால்பட்டி
சாணார்பட்டி தெற்கு, வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் கோபால்பட்டியில் நடந்த விழாவில் அ.தி.மு.க. மாநில ஜெயலலிதா பேரவை செயலாளரும், நத்தம் ஒன்றியக்குழு தலைவருமான ஆர்.வி.என்.கண்ணன் தலைமை தாங்கி கட்சி கொடியேற்றினார். பின்னர் அவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார். இதில் சாணார்பட்டி அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் ராமராஜ், வடக்கு ஒன்றிய செயலாளர் வி.சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் கே.சுப்பிரமணி, பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் ரமேஷ்பாபு, ஹரிஹரன், கண்ணன், சுப்புத்தாய், முத்தம்மாள், பஞ்சவர்ணம், தீபா, வசந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். 
சாணார்பட்டி அருகேயுள்ள கொசவபட்டியில் அ.தி.மு.க. பொன்விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர். சிலைக்கு நத்தம் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.வி.என். கண்ணன் மாலை அணிவித்தும், ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. இதில் சாணார்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் ராமராஜ், வடக்கு ஒன்றிய செயலாளர் வி.சுப்பிரமணி, கிழக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் அந்தோணி மற்றும் நிர்வாகிகள் சந்தனம், கிரேசி, அறிவழகன், வளன்அரசு, சின்னப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நத்தம்
நத்தம் பஸ் நிலையம் அருகே ஒன்றியக்குழு தலைவர் ஆர்.வி.என். கண்ணன் தலைமை தாங்கி அ.தி.மு.க. கொடியேற்றி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து, இனிப்பு வழங்கினார். ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், ராமராஜ், நகர செயலாளர் சிவலிங்கம், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் சேக்தாவூது, மாவட்ட மாணவரணி இணை செயலாளர் அசாருதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர அவைத்தலைவர் சேக்ஒலி வரவேற்றார். இதில் மாவட்ட கவுன்சிலர் பார்வதி, ஒன்றிய அவை தலைவர் பிறவிக்கவுண்டர், நகர பொருளாளர் சீனிவாசன், மாவட்ட பிரதிநிதி மோகன்பாபு, ஒன்றிய குழு துணை தலைவர் முத்தையா, கோவில்பட்டி அழகு, எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ராமமூர்த்தி, மகளிரணி செயலாளர் டாக்டர் சாந்தி முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் குப்பான் நன்றி கூறினார்.


Next Story