காட்பாடி அருகே விபத்தில் இறந்த பெண் போலீஸ் ஏட்டு குடும்பத்துக்கு ரூ. 12½ லட்சம் நிதியுதவி


காட்பாடி அருகே விபத்தில் இறந்த பெண் போலீஸ் ஏட்டு குடும்பத்துக்கு ரூ. 12½ லட்சம் நிதியுதவி
x
தினத்தந்தி 17 Oct 2021 10:17 PM IST (Updated: 17 Oct 2021 10:17 PM IST)
t-max-icont-min-icon

பெண் போலீஸ் ஏட்டு குடும்பத்துக்கு ரூ.12½ லட்சம் நிதியுதவி

காட்பாடி

காட்பாடி அருகே கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் பணியின் போது பறக்கும் படை பணியில் இருந்த பெண் போலீஸ் ஏட்டு மாலதி விபத்து ஏற்பட்டு இறந்தார். அவரின் குடும்பத்தினருக்கு 1997-ம் ஆண்டு இரண்டாவது பிரிவைச் சேர்ந்த காக்கும் காவலர்கள் அமைப்பை சேர்ந்த போலீசார் உதவி செய்ய முடிவு செய்தனர். அதன்படி மாநிலம் முழுவதும் உள்ள 2,513 பேர் தங்களால் முடிந்த பணத்தை கொடுத்தனர். மொத்தம் ரூ.12 லட்சத்து 57 ஆயிரம் வசூலானது. அந்த பணத்தை வழங்கும் நிகழ்ச்சி காட்பாடி காந்தி நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது. 

நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட நிர்வாகிகள் ஜெயகோபி, சுப்பிரமணி, திருமால் ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு விருந்தினராக காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன், கவுரவ விருந்தினராக மாநில தலைமை நிர்வாகி ராஜராஜன் ஆகியோர் கலந்து கொண்டு, மறைந்த ஏட்டு மாலதி குடும்பத்தினரிடம் ரூ.12 லட்சத்து 57 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினர்.

நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம், திருவண்ணாமலை, சென்னை, காஞ்சீபுரம், விழுப்புரம், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை கள்ளக்குறிச்சி பச்சையம்மாள் தொகுத்து வழங்கினார்.

Next Story