கலவை அருேக மினிலாரி மரத்தில் மோதியதில் ‘லிப்ட்’ கேட்டு சென்றவர் பலி
மினிலாரி மரத்தில் மோதியதில் ‘லிப்ட்’ கேட்டு சென்றவர் பலி
கலவை
ராணிப்பேட்டை மாவட்டம் கலவைைய அடுத்த கலவைப்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தியின் மகன் பாலகிருஷ்ணன் (வயது 29). இவர், வேளாண்மை பட்டதாரி. கலவையில் உரம், பூச்சி மருந்துக்கடை வைத்துள்ளார். இவர் நேற்று மாலை விவசாய நிலத்தைப் பார்க்க மினிலாரியை ஓட்டிக்கொண்டு சென்றார். வழியில், கலவை அருந்ததிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை (48) என்பவர் ஓடி வந்து, சைகை காண்பித்து மினிலாரியில் ‘லிப்ட்’ கேட்டுள்ளார். உடனே பாலகிருஷ்ணன் மினிலாரியை நிறுத்தி ஏழுமலைைய ஏற்றிக்கொண்டு புறப்பட்டார்.
கலவையில் இருந்து நேத்தப்பக்கம் செல்லும் வழியில் வெள்ளம்பி ஏரி கால்வாய் வளைவில் மினிலாரி வேகமாக வந்து திரும்பியபோது, கட்டுப்பாட்டை இழந்து ஓடி சாலையோரம் இருந்த ஒரு புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. மினி லாரியில் அமர்ந்திருந்த ஏழுமலை பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பாலகிருஷ்ணன் படுகாயத்துடன் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து கலவை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story