வீடு கட்டுவதற்கு தோண்டிய பள்ளத்தில் கிடைத்த 3 கற்சிலைகள் திண்டிவனம் அருகே பரபரப்பு


வீடு கட்டுவதற்கு தோண்டிய பள்ளத்தில் கிடைத்த 3 கற்சிலைகள் திண்டிவனம் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 17 Oct 2021 10:29 PM IST (Updated: 17 Oct 2021 10:29 PM IST)
t-max-icont-min-icon

வீடு கட்டுவதற்கு தோண்டிய பள்ளத்தில் கிடைத்த 3 கற்சிலைகள் கிடைத்த சம்பவம் திண்டிவனம் அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டிவனம், 

திண்டிவனம் தாலுகா ஊரல் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரி மகன் தவப்புத்திரன். இவர் அந்த பகுதியில் புதிதாக வீடு கட்டுவதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டியுள்ளார். 


அப்போது, 30 செ.மீ. உயரம், 23 செ.மீ. அகலமும் கொண்ட அம்மன் கல்சிலை, 40 செ.மீ. உயரம், 25 செ.மீ. அகலமும் கொண்ட ராமானுஜர் சிலை, ஒரு முனிவர் சிலை என்று 3 கற்சிலைகள் கிடைத்தன. 

 இதுபற்றி அறிந்த ரோசணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்ராஜ், தனிப்பிரிவு சிறப்பு பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் சுகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று, 3 சிலைகளையும் கைப்பற்றி தாசில்தார் செல்வத்திடம் ஒப்படைத்தனர். 

அப்போது,  வடசிறுவளூர் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் வனரோஜா, கிராம நிர்வாக அலுவலர் பிரியநித்திரை, கிராம உதவியாளர் ஏழுமலை ஆகியோர் உடனிருந்தனர். தொடர்ந்து இந்த சிலைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
 இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Next Story