முல்லைப்பெரியாறு அணை ஒரே நாளில் 2½ அடி உயர்வு


முல்லைப்பெரியாறு அணை ஒரே நாளில் 2½ அடி உயர்வு
x
தினத்தந்தி 17 Oct 2021 10:48 PM IST (Updated: 17 Oct 2021 10:58 PM IST)
t-max-icont-min-icon

முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2½ அடி உயர்ந்தது.

தேனி: 

முல்லைப்பெரியாறு அணை
முல்லைப்பெரியாறு அணை மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் குடிநீர் மற்றும் நீர்ப்பாசன வசதி பெற்று வருகிறது. தற்போது கேரள மாநிலம் மற்றும் முல்லைப்பெரியாறு, தேக்கடி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 
இதற்கிடையே முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 128.90 அடியாக இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 1,435 கனஅடியாக இருந்தது. இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை வரை கனமழை பெய்தது. 

நீர்மட்டம் 2½ அடி உயர்வு
இதனால் நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2½ அடி உயர்ந்து 131.30 அடியை எட்டியது. நீர் வரத்து வினாடிக்கு 1,435 கனஅடியில் இருந்து 7,815 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1,300 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:- 
முல்லைப்பெரியாறு அணை- 170, தேக்கடி- 126.6, கூடலூர்- 77.4, சண்முகா நதி அணை- 38.7, உத்தமபாளையம்- 31.2, வீரபாண்டி-32, வைகை அணை-4.8, மஞ்சளாறு அணை- 7, சோத்துப் பாறை அணை- 6.

Next Story