ஓட்டல் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது


ஓட்டல் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 17 Oct 2021 11:07 PM IST (Updated: 17 Oct 2021 11:07 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை அருகே 15 வயது சிறுமியை திருமணம் செய்த ஓட்டல் தொழிலாளியை போலீசார் போக்சோ சட்ட த்தில் கைது செய்தனர்.

மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே 15 வயது சிறுமியை திருமணம் செய்த ஓட்டல் தொழிலாளியை போலீசார் போக்சோ சட்ட த்தில் கைது செய்தனர். 
சிறுமியை திருமணம் செய்த வாலிபர்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா பெருஞ்சேரி மேலத் தெருவை சேர்ந்த ரெகுபதி மகன் பிரசன்னா (வயது 21). இவர் மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் விடுதி ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 2 ஆண்டுகளாக 15 வயது 10-ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவரை காதலித்து வந்துள்ளார். . 
இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமியிடம் ஆசை வார்த்தைளை கூறி பிரசன்னா, சிறுமியை திருமணம் செய்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த சிறுமியின் தாய் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். 
போக்சோவில் கைது
அதன்பேரில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு, போக்சோ சட்டம் மற்றும் குழந்தை திருமண தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பிரசன்னாவை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story