ரூ.17½ லட்சம் செலவில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம்
கண்டவராயன்பட்டியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகத்தை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்தார்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கண்டவராயன்பட்டி ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.17.64 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார்.இதை தொடர்ந்து ஊராட்சி மன்ற கட்டிட வளாகத்தில் மரக்கன்றுகளை அமைச்சர் பெரியகருப்பன் நட்டார். நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தென்னரசு, ஜஹாங்கீர், உதவி பொறியாளர் சுப்பிரமணியன், கண்டவராயன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அபிராமி சசிக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story