மாவட்ட செய்திகள்

விவசாயி திடீர் சாவு + "||" + death

விவசாயி திடீர் சாவு

விவசாயி திடீர் சாவு
அருப்புக்கோட்டையில் வயலுக்கு மருந்து அடிக்க சென்ற விவசாயி திடீரென இறந்து கிடந்தார்.
அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை புளியம்பட்டி மயானம் அருகே விவசாய நிலத்தில் பயிர்களின் நடுவே அழுகிய நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு  டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடம்பன்குளத்தை சேர்ந்த விவசாயியான குமார் (வயது 40) என்பதும், கடந்த 4 நாட்களுக்கு முன்பு  பூச்சி மருந்து அடிக்க வந்த அவர் திடீரென இறந்து கிடந்ததும் தெரியவந்தது. மருந்து சேராமல் உயிர் இழந்தாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த சம்பவம் குறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. லாரி மோதி தொழிலாளி பலி
ராஜபாளையம் அருகே லாரி மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
2. ஆம்புலன்ஸ் மீது பஸ் ேமாதிய விபத்தில் காயம் அடைந்த ஊழியர் சாவு
ஆம்புலன்ஸ் மீது பஸ் மோதிய விபத்தில் காயம் அடைந்த ஊழியர் நடராஜ் பரிதாபமாக இறந்தார்.
3. மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
சிவகாசியில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
4. பேரன்களுக்கு நீச்சல் கற்று கொடுத்த தாத்தா, தண்ணீரில் மூழ்கி சாவு
ஸ்ரீவில்லிபுத்தூரில் பேரன்களுக்கு நீச்சல் கற்று கொடுத்த தாத்தா, தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
5. ஆட்டோ டிரைவர் பலி; போலீஸ்காரர் படுகாயம்
அருப்புக்கோட்டை அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் பலியானார். போலீஸ்காரர் படுகாயம் அடைந்தார்.