ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு பொது மாறுதலுக்கான கலந்தாய்வு
சிவகங்கையில் ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு பொதுமாறுதலுக்கான கலந்தாய்வு இன்று(திங்கட்கிழமை) நடக்கிறது.
சிவகங்கை,
சிவகங்கையில் ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு பொதுமாறுதலுக்கான கலந்தாய்வு இன்று(திங்கட்கிழமை) நடக்கிறது.
கலந்தாய்வு
இது தொடர்பாக சிவகங்கை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மணிவண்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
பள்ளிக்கல்வி துறையில் 2021-2022 ஆம் கல்வியாண்டிற்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழுள்ள மாநில, மாவட்ட திட்ட அலுவலகங்கள், வட்டார மற்றும் குறுவளமையங்களில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு இன்று(திங்கட்கிழமை) காலை 9 மணியளவில் சிவகங்கை கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின்கீழ் சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரியும் 104 ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் 6 மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் என மொத்தம் 110 பேர் இந்த கலந்தாய்வில் கலந்து கொள்கின்றனர்.
முககவசம் அணிய அறிவுரை
இக்கலந்தாய்வானது பணி நியமன மூப்பின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. கலந்தாய்வுக்கு வருகை தரும் ஆசிரியர் பயிற்றுநர்கள் அரைமணி நேரத்திற்கு முன்னரே கலந்தாய்வு மையத்தில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கலந்தாய்வில் கலந்து கொள்ளும் ஆசிரியர் பயிற்றுநர்கள் தவிர மற்றவர்கள் கலந்தாய்வு நடைபெறும் அறையில் அனுமதி கிடையாது. கலந்தாய்வில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் கொரோனா நோய்தொற்று தடுப்பு வழிகாட்டு முறைகளை பின்பற்றி கட்டாயம் முககவசம் அணிந்து பங்ேகற்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story