மாவட்ட செய்திகள்

குடும்ப தகராறில் தந்தை கொலை; மகன் கைது + "||" + Father beaten to death in family dispute

குடும்ப தகராறில் தந்தை கொலை; மகன் கைது

குடும்ப தகராறில் தந்தை கொலை; மகன் கைது
குடும்ப தகராறில் தந்தையை கொன்ற மகன் கைது செய்யப்பட்டார்.
வேப்பந்தட்டை:

தந்தை- மகன்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பூலாம்பாடியை சேர்ந்தவர் வரதராஜ்(வயது 60). விவசாயி. இவருக்கு திருமணமாகி ஜோதி(55) என்ற மனைவியும், சாந்தி(37) என்ற மகளும், ராஜா(35) என்ற மகனும் உள்ளனர். சாந்திக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார். ராஜாவிற்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவர் நெல் அறுவடை எந்திர டிரைவராக உள்ளார். வரதராஜும், ராஜாவும் ஒரே வீட்டில் தனித்தனியாக குடும்பத்துடன் வசித்து வந்தனர். மேலும் இவர்களுக்கு இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
கொலை
இந்நிலையில் நேற்று மாலை அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ராஜா தாக்கியதில் வரதராஜின் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்த அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வரதராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சினிமா ஸ்டண்டு மாஸ்டர் ஜாக்குவார் தங்கத்துக்கு கொலை மிரட்டல்
சினிமா ஸ்டண்டு மாஸ்டர் ஜாக்குவார் தங்கத்துக்கு கொலை மிரட்டல் கமிஷனர் அலுவலகத்தில் புகார்.
2. கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி கைது
கீழ்வேளூரில், கொலை-கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி கைது செய்யப்பட்டார். போலீசாரின் வாகன சோதனையில் அவர் சிக்கினார்.
3. கார் டிரைவர் வெட்டிக்கொலை
கார் டிரைவரை வெட்டிக்கொன்று அலங்காநல்லூர் பகுதியில் பிணம் வீசப்பட்டது. இது தொடர்பாக கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது.
4. தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை
ஸ்ரீவில்லிபுத்தூரில் தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
5. ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் 2 பேர் கைது
திருச்சியில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.