குளத்தில் மண் திருடிய 2 பேர் கைது


குளத்தில் மண் திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 18 Oct 2021 1:31 AM IST (Updated: 18 Oct 2021 1:31 AM IST)
t-max-icont-min-icon

பரப்பாடி அருகே குளத்தில் மண் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இட்டமொழி:
பரப்பாடி அருகே உள்ள சடையநேரி பகுதியில் வடக்கு விஜயநாராயணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோன்ஸ் பிரேம்லால் மற்றும் போலீசார் ரோந்து வந்தனர். அப்போது அங்குள்ள குளத்தில் டிப்பர்்லாரி மற்றும் பொக்லைன் எந்திரத்துடன் சிலர் மணல் அள்ளி கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தனர். அதில் 2 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். டிப்பர் லாரியும், பொக்லைன் எந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்ட 2 பேரும் பரப்பாடி அண்ணாநகரை சேர்ந்த தென்கரை (வயது 52), பற்பநாதபுரத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் பரமேஸ்வரன் (26) என்பதும், தப்பி ஓடியவர்கள் திசையன்விளை செல்வராஜ் மகன் குமார், காமராஜ் நகர் ஈசாக்கு மகன் ஜெபஸ்டின், சடையநேரியை சேர்ந்த கல்யாணசுந்தரம் (60) என்பதும் தெரியவந்தது. தப்பி ஓடிய 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story