சேலத்தில் அ.தி.மு.க. பொன்விழா கொண்டாட்டம் -எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை


சேலத்தில் அ.தி.மு.க. பொன்விழா கொண்டாட்டம் -எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 18 Oct 2021 2:49 AM IST (Updated: 18 Oct 2021 2:49 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் அ.தி.மு.க. பொன்விழா கொண்டாட்டத்தையொட்டி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சேலம்:
சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கட்சியின் பொன்விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சேலம் அண்ணா பூங்காவில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவச்சிலைகளுக்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வெங்கடாஜலம் தலைமை தாங்கி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கேக் வெட்டி தொண்டர்கள், பொதுமக்களுக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் பாலசுப்பிரமணியன் எம்.எல்.ஏ., மாநகர் மாவட்ட அவைத்தலைவர் பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செல்வராஜு, நடேசன், சக்திவேல், ரவிச்சந்திரன், பொருளாளர் பங்க் வெங்கடாசலம், பகுதி செயலாளர்கள் சரவணன், சண்முகம், யாதவமூர்த்தி, பாலு, பாண்டியன், ஜெகதீஷ்குமார், முருகன், ஜெயலலிதா பேரவை செயலாளர் சரவணன் மணி, பொதுக்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், கிருஷ்ணமூர்த்தி, கூட்டுறவு வங்கி தலைவர்கள் ராஜேந்திரன், ஜான்கென்னடி, கே.சி. செல்வராஜ், சதீஷ்குமார், சுந்தரபாண்டியன், பாமாகண்ணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வக்கீல் கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story