அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்தவர் கைது


அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்தவர் கைது
x
தினத்தந்தி 18 Oct 2021 3:53 AM IST (Updated: 18 Oct 2021 3:53 AM IST)
t-max-icont-min-icon

வெம்பக்கோட்டையில் அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

தாயில்பட்டி, 
வெம்பக்கோட்டை பஸ் ஸ்டாப்பில் வாகன சோதனையில்  வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் வேல்சாமி ஈடுபட்டார். அப்போது சந்தேகத்தின் பேரில் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த வெம்பக்கோட்டை தெற்குதெருவை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 43) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் சாக்குப்பையில் 20 கிலோ சரவெடிகள் அனுமதியின்றி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார்,  கோவிந்தராஜை கைது செய்தனர்.

Next Story