திருக்கழுக்குன்றம் பஸ் நிலையம் அருகே வாங்கிய பொருளுக்கு பணம் கேட்ட கடை ஊழியருக்கு கத்திக்குத்து - 3 பேர் கைது


திருக்கழுக்குன்றம் பஸ் நிலையம் அருகே வாங்கிய பொருளுக்கு பணம் கேட்ட கடை ஊழியருக்கு கத்திக்குத்து - 3 பேர் கைது
x
தினத்தந்தி 18 Oct 2021 12:33 AM GMT (Updated: 18 Oct 2021 12:33 AM GMT)

திருக்கழுக்குன்றம் பஸ் நிலையம் அருகே வாங்கிய பொருளுக்கு பணம் கேட்ட கடை ஊழியரை கத்தியால் குத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கல்பாக்கம்,

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு கடைக்கு நேற்று முன்தினம் 5 வாலிபர்கள் வந்தனர். கடையில் இருந்த பெண் ஊழியர் அவர்களிடம் என்ன வேண்டும் என்று கேட்டார். அப்போது அவர்கள் 5 பேரும் அவரை கேலியாக பேசி் சில பொருட்களை வாங்கியதாக கூறப்படுகிறது.

பொருட்களுக்கான பணத்தை கடை ஊழியர் கேட்டபோது அதை கொடுக்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது கடை ஊழியர் சுரேஷ் (வயது23), வாங்கிய பொருளுக்கு பணம் தராமல் உள்ளதை அருகில் உள்ள கடைக்காரரிடம் சொல்ல முயன்றார். இதையடுத்து அந்த வாலிபர்களில் ஒருவர் தன்னிடம் இருந்த கத்தியால் சுரேஷின் கழுத்தின் அருகே குத்தியுள்ளார்.

இதனால் காயம் அடைந்த சுரேஷை அருகில் இருந்தவர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இது குறித்த புகாரின் பேரில் திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த மகேஷ் (24), அஜித்குமார் (22) மற்றும் ஜாகிர் உசேன் (20) ஆகியோரை கைது செய்தனர். 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story