குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நிறைவு காணிக்கைகளை உண்டியலில் செலுத்திய பக்தர்கள்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று பக்தர்கள் நேர்த்திகடன் காணிக்கைகளை கோவில் உண்டியலில் செலுத்தினர்
காணிக்கைகளை உண்டியலில் செலுத்திய பக்தர்கள்
பிரசித்திபெற்ற தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 6ம்தேதி தொடங்கியது. 15ம்தேதி மகஷாசூர சம்காரம் நடத்தப்பட்டது. 16ம் தேதி காப்பு களைதலுடன் விழா நிறைவு பெற்றது. இந்த நாட்களில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்படவில்லை. நேற்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்து சாமி தரிசனம் செய்தனர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும், அலகு குத்தியும் வேண்டுதலை நிறைவேற்றினர். திருவிழா நாட்களில் பல்வேறு வேஷங்கள் அணிந்து வசூல் செய்த காணிக்கையை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து உண்டியல்களில் செலுத்தினர்.
Related Tags :
Next Story