தடுப்பூசி செலுத்தும் பணி


தடுப்பூசி செலுத்தும் பணி
x
தினத்தந்தி 18 Oct 2021 4:05 PM IST (Updated: 18 Oct 2021 4:05 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

திருப்பூர்
திருப்பூரில் பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 
வீடுவீடாக சென்று தடுப்பூசி 
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 16ந் தேதியில் இருந்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதலில் முன்கள பணியாளர்களான டாக்டர்கள், நர்சுகள், செவிலியர்களுக்கு போடப்பட்டது. இதன் பின்னர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தடுப்பூசி வந்தது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் தடுப்பூசி செலுத்தும் வகையில் மெகா தடுப்பூசி முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. 
இதற்கிடையே பொதுமக்கள் பலரும் கூட்டம் அதிகமாக இருக்கும் என்ற எண்ணத்தில் தடுப்பூசி செலுத்த வராமல் இருக்கிறார்கள். இதனால் அவர்களது வீடுகளுக்கே சென்று தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டமும் திருப்பூரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
உற்சாகம் 
இந்நிலையில் நேற்று மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தடுப்பூசி செலுத்துவதாக சுகாதாரத்துறை சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி காலையில் இருந்தே மாலை வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி முகாம்கள் நடந்தது. இதிலும் பொதுமக்கள் சென்று உற்சாகமாக தடுப்பூசி செலுத்தினர். 
இதுபோல் தடுப்பூசி குறைவாக செலுத்தப்பட்ட பகுதிகள் கணக்கெடுக்கப்பட்டு, அந்த பகுதிகளுக்கு மருத்துவ குழுவினர் வீடுவீடாகவும் சென்று தடுப்பூசி செலுத்தினர். தங்களது பகுதிகளுக்கே தடுப்பூசி வந்ததால் பலரும் உற்சாகமாக தடுப்பூசி செலுத்தினார்கள். 




Next Story