குடிநீர் கிணற்றில் கழிவுநீர் கலப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம்
பந்தலூர் அருகே குடிநீர் கிணற்றில் கழிவுநீர் கலப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் தோட்ட தொழிலாளர்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
பந்தலூர்
பந்தலூர் அருகே குடிநீர் கிணற்றில் கழிவுநீர் கலப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் தோட்ட தொழிலாளர்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
குடிநீர் கிணறு
பந்தலூர் அருகே கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்ட(ரேஞ்சு-1) பத்துலைன்ஸ் பகுதியில் ஏராளமான தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்காக அங்கு குடிநீர் கிணறு அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அந்த கிணறு சரிவர தூர்வாரப்படாமல் கிடக்கிறது. மேலும் கிணற்றை சுற்றிலும், கிணற்றுக்குள்ளும் புதர் செடிகள் வளர்ந்து காணப்படுகிறது.
இதனால் அந்த கிணற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை குடிக்கும் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
பாதுகாப்பற்ற நிலை
இதுகுறித்து அப்பகுதி தொழிலாளர்கள் கூறியதாவது:-
எங்கள் பகுதியில் உள்ள குடிநீர் கிணறு முறையாக பராமரிக்கப்படுவது இல்லை. கிணற்றை ஒட்டி உள்ள குடியிருப்புகளில் இருந்து கழிவுநீர் வெளியே வடிகால் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் கிணற்று நீரோடு கலக்கும் நிலை காணப்படுகிறது.
அந்த கிணற்றில் மேல் மூடி கூட இல்லை. இதனால் கிணற்றுக்குள் எட்டி பார்க்கும் ஆவலில் சிறுவர்-சிறுமிகள் தவறி விழுந்துவிடும் அபாயம் உள்ளது. இதனால் பாதுகாப்பற்ற நிலையில் குடிநீர் கிணறு காணப்படுகிறது. எனவே கிணற்றை தூர்வாருவதோடு கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். மேலும் மேல் மூடி அமைத்து கிணற்றை சுற்றி தடுப்பு சுவர் கட்ட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story