பந்தலூரில் பலத்த மழை
பந்தலூரில் பலத்த மழை
பந்தலூர்
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக பந்தலூர், உப்பட்டி, பொன்னானி, பிதிர்காடு, நெலாக்கோட்டை, கரியசோலை, தேவாலா, சேரம்பாடி, எருமாடு, தாளூர், அய்யன்கொல்லி, கொளப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக பொன்னானி, சோலாடி, வெள்ளேரி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மேலும் விவசாய நிலங்களை மழைநீர் சூழ்ந்து உள்ளது. அம்பலமூலா அரசு மேல்நிலைப்பள்ளி மைதானம், வெள்ளேரி விளையாட்டு மைதானத்தில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறிவிட்டது. பந்தலூர் பஜாரில் பல இடங்களில் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டதால், மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது.
Related Tags :
Next Story