திருச்செங்கோடு நகராட்சி 5-வது வார்டு கோம்பை நகர் பகுதியை பிரிக்க பொதுமக்கள் எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்தில் மனு


திருச்செங்கோடு நகராட்சி 5-வது வார்டு கோம்பை நகர் பகுதியை பிரிக்க பொதுமக்கள் எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 18 Oct 2021 9:10 PM IST (Updated: 18 Oct 2021 9:10 PM IST)
t-max-icont-min-icon

திருச்செங்கோடு நகராட்சி 5-வது வார்டு கோம்பை நகர் பகுதியை பிரிக்க பொதுமக்கள் எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்தில் மனு

நாமக்கல்:
திருச்செங்கோடு நகராட்சி 5-வது வார்டுக்குட்பட்ட கோம்பைநகர் பகுதியை பிரித்து 3-வது வார்டுடன் இணைக்கும் திட்டத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு
திருச்செங்கோடு நகராட்சி 5-வது வார்டு கோம்பை நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது :- திருச்செங்கோடு நகராட்சி 5-வது வார்டுக்குட்பட்ட கோம்பைநகர் பகுதியை இரண்டாக பிரித்து ஒரு பகுதியை நெசவாளர் காலனியில் இணைப்பதாகவும், மற்றொரு பகுதியை 3-வது வார்டு கைலாசம்பாளையம் வேல்முருகன் நகர் பகுதியோடு இணைப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. எனவே கோம்பை நகர் ஊர் பொதுமக்கள் சார்பில் எங்களை எதிர்ப்பை பதிவு செய்கிறோம்
கோம்பைநகர் பகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 1,000-க்கும் மேல் உள்ளது. முன்புபோல் சேலம் ரோடு பகுதியையும் சேர்த்தால் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 1,500-க்கு மேல் வரும். இது சம்பந்தமாக ஏற்கனவே முதல்-அமைச்சர் தனிப்பிரிவு, தேர்தல் அதிகாரி, உள்ளாட்சித்துறை அமைச்சருக்கும் மனு அளித்தோம்.
தனிவார்டாக அறிவிக்க வேண்டும்
எனவே கோம்பை நகர் பகுதியை இரண்டாக பிரிக்காமல், கோம்பை நகர் மற்றும் சேலம் ரோடு பகுதிகளை ஒன்றாக இணைத்து தனி வார்டாக அறிவிக்க வேண்டும். அல்லது கோம்பை நகரின் பகுதி அனைத்தையும் தற்போது இருப்பது போல் நெசவாளர் காலனி பகுதியுடன் ஒன்றாக இணைத்து 5-வது வார்டு பகுதியிலேயே தொடர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர்.

Next Story