சாத்தான்குளம் அருகே பெண்ணுக்கு அரிவாள் வெட்டு


சாத்தான்குளம் அருகே பெண்ணுக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 18 Oct 2021 4:20 PM GMT (Updated: 2021-10-18T21:50:12+05:30)

சாத்தான்குளம் அருகே பெண் அரிவாளால் வெட்டப்பட்டார்

சாத்தான்குளம்:
க்சாத்தான்குளம் அருகே செம்மன்குடியிருப்பில் உள்ள கோவிலில் தசரா குடில் அமைக்கப்பட்டிருந்தது. இதனிடையே கோவிலுக்கு வரி கொடுக்காதது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அதே ஊரைச்சேர்ந்த முத்துராஜா மனைவி மாற்றுத்திறனாளியான சித்திரை பாப்பா (வயது 40) என்பவரது உறவினர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை சித்திரை பாப்பா தட்டிக் கேட்டார். இதனால் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த 5 பேர் கும்பல், சித்திரை பாப்பாவை சரமாரியாக தாக்கி அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயம் அடைந்த அவர் உடனடியாக சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 
இதுகுறித்த புகாரின் பேரில் அதே பகுதியை சேர்ந்த வெள்ளத்துரை என்பவரது மகன்கள் செந்தில், ராஜதுரை, முத்துக்குமார், சத்தியசெல்வன் மற்றும் பாண்டி மகன் சிவகுமார் ஆகிய 5 பேர் மீது சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்சாம்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story